போதைப் பொருள் பயன்படுத்தும் பேருந்து சாரதிகளை கைது செய்ய நடவடிக்கை
போதைப் பொருள் பயன்படுத்தும் பேருந்து சாரதிகளை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பிரிவு உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
ஐஸ் போதை மாத்திரை மற்றும் ஏனைய போதைப் பொருட்களை பயன்படுத்தியவாறு பொதுப் போக்குவரத்து பேருந்து சேவைகளில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் பேருந்து நடத்துனர்கள் கைது செய்யப்படுவர் என குறிப்பிட்டுள்ளார்.
போதைப் பொருள் பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் பேருந்து நடத்துனர்களை கண்டறிவதற்கு விசேட கருவியொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ள பேருந்து சாரதிகள்

சந்தேகத்திற்கு இடமான சாரதிகள் மற்றும் பேருந்து நடத்துனர்கள் சட்ட வைத்திய அதிகாரியினால் பரிசோதனைக்கு உட்படுத்தி அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறான 27 பேர் அண்மையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் உத்தியோகத்தர் சிங்கள ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சில பேருந்து சாரதிகள் மற்றும் பேருந்து நடத்துனர்கள் நீண்ட நாட்களாக போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
பேருந்து சாரதிகள் மட்டுமன்றி தலைநகரைச் சேர்ந்த செல்வந்த இளைஞர் யுவதிகளும் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பொலிஸாருக்கு பேருந்து சாரதிகள் மற்றும் பேருந்து நடத்துனர்கள் மட்டுமா கண்களுக்கு தெரிகின்றனர் எனவும் வேறு எவரும் தென்படுவதில்லையா எனவும் கெமுனு விஜேரட்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan