திருகோணமலையில் பேருந்து சாரதி அதிரடி கைது : பொலிஸார் தீவிர சோதனை
இலங்கை போக்குவரத்து சபையின் சாரதியொருவர் போதைப் பொருள் பாவித்த குற்றச்சாட்டின் பேரில் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை நேற்று(14.02.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கான பணம்: இலங்கைக்கு வந்துள்ள பெருமளவு தங்க பிஸ்கட் - அம்பலமான விடயம்
அதிரடி கைது நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி பயணிகளை ஏற்ற வந்த பேருந்தின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் திருகோணமலை மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் போக்குவரத்து சபையில் கடமையாற்றி வரும் வவுனியா - ஈரப்பெரிய குளம்,வெஹரகம பகுதியில் வசித்து வரும் 39 வயதுடையவர் என்றும் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட பேருந்தின் சாரதி போதையில் பேருந்தை செலுத்தி வருவதாக திருகோணமலை மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவிற்கு பயணியொருவர் வழங்கிய தகவலுக்கு அமைவாக திருகோணமலை பேருந்து தரிப்பிடத்தில் சாரதியை பரிசோதனை செய்த போது போதைப் பொருள் பாவணையில் உள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த சாரதியை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சாரதியை திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக திருகோணமலை மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
தனுஷ் இல்லை, அசுரன் படத்தில் நான் நடித்திருக்கனும், விட்டுக்கொடுத்துட்டேன்.. சொன்னது யார் பாருங்க Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan