நாடளாவிய ரீதியில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள்
சிவபெருமானின் விரதங்களில் ஒன்றான சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இன்று(15.02.2026) கிழக்கு மாகாணத்தில் உள்ள சிவன் ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
உலகை ஆளும் சிவபெருமானின் அற்புதங்கள் நிகழும் கிழக்கு மாகாணத்தில் சிறப்பு பெற்ற ஆலயத்தில் பொதுமக்களால் சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு - கல்லடி கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் அடியார்கள் தங்களின் வேண்டுகோளை நிறைவேற்ற கொன்றை மரத்தில் நேத்தி கடன்களை கட்டி, வழிபாடு செய்யப்பட்டுள்ளது.
விசேட வழிபாடுகள்
அத்துடன், தேவார பாராயணங்கள் மூலம் வழிபாடுகள் இடம்பெறும் ஆலயத்தில் அடியார்களின் பூஜை பொருட்களை வைத்தே வழிபாடுகள், ஆகம முறைப்படி இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மட்டக்களப்பு - கல்லடி கொக்கட்டி ஈஸ்வரர் ஆலய பிரதம குரு தம்பிப்பிள்ளை தவராஜா தலைமையில் சிவராத்திரி விசேட வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது மாவட்டத்தில் உள்ள அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானின் அருள் பெற்று சென்றுள்ளனர்.


மன்னார் - திருக்கேதீஸ்வரம்
மன்னார் - திருக்கேதீஸ்வரம் சிவன் கோவில் மகா சிவராத்திரி பெருவிழா நிகழ்வுகள் இன்று காலை நடந்து முடிந்துள்ளது.
இதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

அத்துடன், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மகா சிவராத்திரி நிகழ்வுகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் ஹரிணி அமர சூரிய விசேட சிவ தேவி பூஜையிலும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்- ஆஷிக்



மஹா சிவராத்திரி 2026 நேரலை
தனுஷ் இல்லை, அசுரன் படத்தில் நான் நடித்திருக்கனும், விட்டுக்கொடுத்துட்டேன்.. சொன்னது யார் பாருங்க Cineulagam
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan