பிறப்பு சான்றிதழ் விண்ணப்ப படிவம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை! பதிவாளர் நாயகம் திணைக்களம் விளக்கம்
பிறப்புச் சான்றிதழை பெறுவதற்கான படிவங்களுக்கு நாட்டில் தட்டுப்பாடு இல்லை என பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தங்காலை மாவட்டச் செயலகத்தின் மேலதிக பதிவாளர் பிரிவில் பிறப்புச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான படிவங்களுக்குப் பதிலாக இறப்புச் சான்றிதழ் படிவங்களைப் பயன்படுத்துமாறு அறிவிப்பு ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பதிவாளர் நாயகம் திணைக்களம் விளக்கம்
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் எதிர்ப்பு உருவானமையினால் படிவம் குறித்தும் பதிவாளர் நாயகம் திணைக்களம் விசாரணை நடத்தியுள்ளது.
இது தொடர்பில், பதிவாளர் நாயகம் பிரபாத் அபேவர்தன இன்று விசாரணைகளை மேற்கொண்ட போது, உரிய நேரத்தில் படிவங்கள் விநியோகம் செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பிரதேச செயலகத்தில் மீண்டும் படிவங்கள் கிடைக்கும் வரை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.