நீதித்துறையில் பதவியுயர்வுகள்: ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ள சட்டத்தரணிகள் சங்கம்
நீதித்துறையில் எதிர்கால பதவியுயர்வுகள் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள சேவை மூப்பு(seniority) அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கடிதம் மூலம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னைய காலங்களில் இந்த நடைமுறை மீறப்பட்டுள்ளதாக, சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
பதவியுயர்வுகள் வழங்கல்
தகுதி அடிப்படையில் பதவியுயர்வு வழங்கப்பட வேண்டுமெனில், அதற்கான தெளிவான, வெளிப்படையான மற்றும் நியாயமான வழிகாட்டுதல்கள் தற்போது இல்லையென சங்கம் சுட்டிக்காட்டியது.

இத்தகைய அளவுகோல்கள் இல்லாமல் பதவியுயர்வுகள் வழங்கப்படுவது நீதித்துறையின் நியாயத்தையும் பொதுமக்கள் நம்பிக்கையையும் பாதிக்கலாம் என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தக் கடிதத்தின் பிரதிகள் அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள், பிரதம நீதியரசர் பிரீதி பட்மன் சூரசேனா மற்றும் நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam