சேதன பசளை இறக்குமதிக்கு தடை விதித்த இலங்கை! சீனா அதிருப்தி
சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய உத்தேசிக்கப்பட்டிருந்த சேதன பசளைக்கு இலங்கை தடை விதித்துள்ள நிலையில், சீனா அதிருப்தி அடைந்துள்ளதோடு, கொழும்பில் உள்ள சீன தூதரகம் இந்த தீர்மானத்தை கண்டித்து அரசாங்கத்திற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
சீன சேதன பசளை மீதான தரம் குறித்து சோதனையின் போது விவசாயத்திற்கும்,மக்களுக்கும் ஆபத்துக்களை ஏற்படுத்த கூடிய பற்றீரியாக்கள் காணப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே இலங்கை தடை விதித்திருந்தது.
சீனாவின் சேதனப் பசளையில், மிகவும் அபாயகரமான பற்றீரியாக்கள் இருந்தமை கண்டயறிப்பட்டதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து இலங்கை அரசு குறித்த பசளையை இறக்குமதி செய்யும் யோசனையை கைவிட்டது.
இதனையடுத்து சீனா மற்றுமொரு தொகுதி சேதன பசளையை இலங்கைக்கு அனுப்பியதுடன் அதனை சோதனைக்கு உட்படுத்திய போது அதிலும் குறித்த ஆபத்தான பற்றீரியாக்கள் காணப்பட்டுள்ளன.
இதன் பின்னரே இலங்கை அரசாங்கம் தடை உத்தரவை பிறப்பித்தது. பசளையைின் தரத்தை மேற்கோள்காட்டி நிராகரித்தமையால் சீனா பெரும் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளது.
சீவின் என்பது சீனாவின் ஒரு உயர் தொழில்நுட்ப நிறுவனம் என்பதோடு, இது புதிய வகை கடற்பாசி கரிம உர உற்பத்தியில் கவனம் செலுத்துவதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
சீவின் பயோடெக் குரூப் கோ., லிமிடெட் இயூகோசெர்ட் இயற்கை சேதனச் சான்றிதழ், OMRI சான்றிதழ், ரீச் சான்றிதழ் மற்றும் அவுஸ்திரேலிய சேதன உள்ளீட்டு சான்றிதழ் போன்றவறைக் கொண்டுள்ளது.
அத்துடன் ஐரோப்பா மற்றும் உலகின் 50 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனம், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் கிளை நிறுவனங்களையும் கொண்டுள்ளது.
அதன் உற்பத்தி செயற்பாட்டில், கரிம உரம் 600 பாகை செல்சியசியஸ் வெப்ப நிலையில் அனைத்து தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளும் கொல்லப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவைகள் சோதனை மற்றும் பகுப்பாய்வின் ஊடாக 3 நாட்களுக்குப் பின்னர் எர்வினியா உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் பாற்றீரியாக்களைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சர்வதேச தாவர பாதுகாப்பு சாசனத்திற்கு அமைய, எர்வினியாவைக் கண்டறிய குறைந்தது ஆறு நாட்கள் எடுக்குமெனவும் கூறப்பட்டுள்ளது.
தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவைகள் அவசர தீர்மானம் அறிவியல் அடிப்படை இல்லாதது எனவும் சீனத்தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவைகள் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு சீவின் நிறுவனத்தின் கரிம உரத்தை நிராகரிக்க இலங்கை அதிகாரிகள் எடுத்த தீர்மானத்தால், நிறுவனத்திற்கு பெரும் நிதி இழப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை தரப்பும் சீன நிறுவனமும் விஞ்ஞானம் மற்றும் உண்மைகளை மதிக்கும் கொள்கைகள் மற்றும் ஒப்பந்தத்தின் உணர்வு ஆகியவற்றை ஒருங்கிணைக்க முடியும் எனவும், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நன்மைகளுக்காக நல்லெண்ணத்துடன் கலந்துரையாடலின் மூலம் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியுமெனவும் சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 12 மணி நேரம் முன்

அண்ணா சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு மிர்ச்சி செந்தில் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
