மாதாந்தம் ஒரு இலட்சத்திற்கும் குறைவான வட்டியை பெறும் மக்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவிற்கும் குறைவான வட்டியை பெற்றுக் கொள்ளும் மக்களிடம் இருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள வட்டியை உடனடியாக அகற்றுவதற்காக அரசாங்கத்தின் பணப்புழக்கத்திற்கு ஏற்ப முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் வயோதிபர்களிடமிருந்து அறவிடப்படும் வங்கி வட்டி விகிதங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (25.04.2024) கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வருடாந்தம் கிட்டத்தட்ட நாற்பது பில்லியன் பணத்தை நிதி மீள் நிரப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டும். கடந்த காலத்தில் 16 வீதமாக இருந்த கடன் வட்டி வீதம் 9 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
முறையான வேலைத்திட்டம்
இந்நாட்டில் வாழும் முதியோர் சமுதாயம் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து தெளிவாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நாட்டிலுள்ள முதியோர் சமூகத்திற்கு உடனடி தீர்வுகளை வழங்குவதற்கு பதிலாக தற்போதுள்ள பணப்புழக்கத்திற்கு ஏற்ப முறையான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
