பேராபத்தில் சிக்கியுள்ள இலங்கை - புலம்பெயர் இலங்கையர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகளும், சொத்து இழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் புலம்பெயர் இலங்கையர்களிடம் அரசாங்கம் உதவி கோரியுள்ளது.
அதற்கமைய இலங்கையர்களுக்கும் வெளிநாட்டினருக்கும் திட்டமொன்று அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உதவித் தொகை
நிதி உதவிகளை வைப்புச் செய்வதற்கான வங்கிக் கணக்கு இலங்கையிலுள்ள வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

உதவித் தொகையை இலங்கை ரூபாவிலும் அமெரிக்க டொலரிலும் வைப்புச்செய்யலாம். இதற்காக இரண்டு கணக்கு இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டம் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதுவர்கள் கலந்து கொண்டனர்.