மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் ஆதரவை பெற்ற தென்சூடான்
நடைபெற்று வரும் 58ஆவது அமர்வின் போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் ஆதரவை தென் சூடான்(sudan) பெற்றுள்ளது.
தேசிய முன்னுரிமைகளின் அடிப்படையில் அமைதி மற்றும் வளர்ச்சியை ஒருங்கிணைப்பதில், தெற்கு சூடானின் முயற்சிகளை சர்வதேச சமூகமும், பேரவையும் ஆதரிக்க வேண்டும் என்று இலங்கை, கோரிக்கை விடுத்துள்ளது.
தென் சூடானின் ஒப்புதல்
தென் சூடானின் உள்ளக பிரச்சினைகளுக்கான நீடித்த மற்றும் நிலையான தீர்வுகள், அதன் மக்கள் மற்றும் அரசாங்கத்தின் கைகளில் உள்ளன என்று இலங்கை, பேரவையிடம் தெரிவித்துள்ளது.
அமைதி மற்றும் பாதுகாப்பை முன்னேற்றுவதில் தென் சூடானில் ஏற்பட்டுள்ள பல முற்போக்கான முன்னேற்றங்களை இலங்கை வரவேற்கிறது.
இந்த சூழலில், தென் சூடானின் ஒப்புதல் இல்லாமல் வேறு எந்த முயற்சிகள் மற்றும் வழிமுறைகள், உதவியற்றதாகவும் எதிர்மறையானதாகவும் இருக்கும் என்று இலங்கையின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |