ஐ.நாவில் ரஷ்யாவுக்கு எதிரான வாக்களிப்பை தவிர்த்த இலங்கை
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஐ.நா பொதுச் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பில் இருந்து இலங்கை விலகியுள்ளது.
குறித்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று (02) இடம்பெற்றதுடன், அதற்கு ஆதரவாக 141 நாடுகள் வாக்களித்துள்ளன. தீர்மானத்திற்கு எதிராக 5 நாடுகள் வாக்களித்துள்ள நிலையில், 35 நாடுகள் வாக்களிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
ரஷ்யா, பெலாரஸ், எரித்திரியா, வட கொரியா மற்றும் சிரியா ஆகிய நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன, இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், சீனா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே உட்பட 35 பேர் வாக்களிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
இதேவேளை, இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்காத நாடுகளில் பெரும்பான்மையான நாடுகள் ஆசிய நாடுகள் என தகவல் வெளியாகியுள்ளது.