இலங்கையில் எயிட்ஸ் மற்றும் சமூகவியாதிகளை பரிசோதிப்பதற்கான உபகரணங்களுக்குத் தட்டுப்பாடு
எயிட்ஸ் உள்ளிட்ட சமூக வியாதிகளைப் பரிசோதிப்பதற்கான உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எயிட்ஸ் உள்ளிட்ட சமூக வியாதிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் Elisa-எலிசா பரிசோதனைக்கான உபகரணங்கள் பற்றாக்குறையாக காணப்படுகின்றது.
இதனால் குறித்த பரிசோதனைகளை கைவிட அல்லது தாமதிக்க நேர்ந்துள்ளதாக இலங்கை ஆய்வு கூட தொழில்நுட்ப வல்லுனர் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
VDRL பரிசோதனைக்கான உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக ஏனைய சமூக வியாதிகளைக் கண்டறிவதிலும் தடங்கல் நிலை ஏற்படலாம் என்றும் இதன் காரணமாக எதிர்காலத்தில் எயிட்ஸ் மற்றும் சமூக வியாதிகள் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பாரிய அபாயநிலையொன்றை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எயிட்ஸ் நோய்த் தொற்றுக்குள்ளான தாயிடமிருந்து பிறக்கும் குழந்தைக்கு எயிட்ஸ் நோய் தொற்று ஏற்படுவதைத் தடுப்பதில் இலங்கை முன்னர் சர்வதேச மட்டத்தில் வெற்றி பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.