குற்றவாளிகளை பாதுகாக்கின்ற நாடாக இலங்கை இருக்கக்கூடாது: சிறிநேசன் வலியுறுத்து
குற்றவாளிகளுக்கு பதவி உயர்வு கொடுக்கின்ற, குற்றவாளிகளைப் பாதுகாக்கின்ற நாடாக இந்த நாடு இருக்கக் கூடாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழு பேச்சாளருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 127வது ஜனனதினம் இன்று மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,
சாத்வீகப் போராட்டம்
''இன்றைய தினம் தமிழ்த் தந்தை செல்வநாயகத்தின் 127 வது பிறந்த தினத்தை நாங்கள் அமைதியான முறையில் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம்.
அந்த வகையில் தந்தை செல்வா தமிழர்களைன் இடர்களை அறிந்து சாத்வீக முறையில் அகிம்சைப் பாதையில் தமிழர்களின் சுதந்திரத்தை வென்றெடுக்க வேண்டும் என தமது வாழ்நாளில் அதிக காலத்தை அர்ப்பணித்தார்.
ஈழத்து காந்தி என்று சொல்லக் கூடிய விதத்தில் சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுத்தார். அதன் மூலமாக உண்மை, நேர்மை, நீதியான பார்வை மற்றும் சத்தியம் என்பவற்றின் அடிப்படையில் அவர் தமிழர்களால் துதிக்கப்படுகின்ற மகானாகக் காணப்படுகின்றார்.
தமிழர்களின் எதிர்காலத்தைச் சிந்தித்து தமிழ் மக்கள் ஒரு துளி இரத்தமும் சிந்தாமல் இந்த சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் காந்திய வழியில் பயணித்த உத்தமராகவே நாங்கள் அவரைப் பார்க்கின்றோம்.
அப்படிப்பட்ட அந்த உத்தமரின் கனவு இந்த இனவாத அரசுகளினால் தோற்கடிக்கப்பட்டது" என்றார்.








புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

சவால் விட்ட ஜனனி, ஆனால் காத்திருந்த பெரிய அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
