செவ்வந்தியை கைது செய்த இலங்கை! கோட்டாபயவை காப்பாற்ற காணாமல் ஆக்கப்பட்ட சாரா..
நாட்டில் புரையோடிப்போயுள்ள போதைப்பொருள் வர்த்தகத்தை முழுமையாக ஒழிக்கப் போவதாக சமகால அநுர அரசாங்கம் சூளுரைத்துள்ளது.
இந்நிலையில் அதற்கான நடவடிக்கையையும் தீவிரமாக இடம்பெற்று வருகிறது. அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், பாதாள உலகம் மற்றும் போதைப்பொருளுடன் தொடர்புடைய முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் தம்மை பிடிக்க முடியாது என இறுமாப்புடன் வெளிநாடுகளில் பதுங்கியிருந்த பலர் அதிரடியாக வேட்டையாடப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்படுகின்றனர்.
அழைத்து வந்தவர்களில் பலர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்துடன் மிகவும் நெருக்கமானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக போதைப்பொருள் வர்த்தகத்துடன் ராஜபக்ச குடும்பத்திற்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகஅரசாங்கம் குற்றம் சாட்டி வருகிறது.
இவ்வாறான நிலையில் இலங்கையை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் அம்பலப்படுத்தப்படுவதுடன் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தேர்தல் பிரச்சாரங்களில், தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சூளுரைத்திருந்தார்.
எனினும் கடந்த ஒரு வருடகாலத்தில் அது தொடர்பான எந்தவோரு காத்திரமான தகவல்களும் அரசு தரப்பில் இதுவரை வெளியிடவில்லை. இந்த விடயங்கள் தொடர்பில் மேலும் ஆராய்கின்றது இப்படிக்கு அரசியல் நிகழ்ச்சி..



