இந்த ஆட்சியில் மக்கள் மாபெரும் வளர்ச்சியை அடைந்துள்ளனர்! பிரதி அமைச்சர் சரத்
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் நாளுக்கு நாள் நாடு வளமடைந்து மக்களும் மாபெரும் வளர்ச்சியை அடைந்து வருவதாக வீட்மைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி. பி. சரத் தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை பிம்புரத்தேவ பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோது, பிரதி அமைச்சர் டி. பி. சரத் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வளமான நாடு
எதிர்பாராத தருணங்களில் நிகழும் சிறு சம்பவங்களால் ஒரு முழுப் பொருளாதாரமும் சரிந்துவிடும் என்று கூச்சலிடும் எதிர்க்கட்சிகளிடம் நாங்கள் கூறுகிறோம், சிறிது காலத்திற்குப் பிறகு அந்த எதிர்க்கட்சி நாளுக்கு நாள் அழிந்து காணாமல் போய்விடும்.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் நாங்கள் ஒரு வளமான நாட்டில் அழகான மக்களாக நாளுக்கு நாள் மாபெரும் வளர்ச்சியை அடைந்து வருகிறோம் என்றும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.