பலப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பாதுகாப்பு! கொழும்பில் தங்காலை நோக்கி படையெடுத்துள்ள பல்கலைக்கழக மாணவர்கள் (Video)
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்ஒன்றியமும், காலிமுகத்திடல் போராட்டக்காரர்களும் இணைந்து தற்போது போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து தற்போது இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தங்காலை சிறைச்சாலைக்கு பேரணி
பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள வசந்த முதலிகே மற்றும் வண. கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்காலை சிறைச்சாலைக்கு போராட்டக்காரர்கள் பேரணியாக செல்லவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இப் போராட்டதில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்ஒன்றிய பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் காலிமுகத்திடல் போராட்ட இயக்கத்தின் ஏனைய செயற்பாட்டாளர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.
மேலும் அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.













இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! வாயடைத்துப்போன ரசிகர்கள் Manithan
