காலிமுகத்திடலில் மீண்டும் போராட்டம்! பொலிஸ் மா அதிபரிடம் விளக்கம் கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு
காலி முகத்திடலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, போராட்டத்தில் உயிரிழந்தவர்களை அமைதியான முறையில் நினைவு கூர்ந்த சிறுவர்கள் உட்பட மக்களுக்கு எதிராக பொலிஸார் வன்முறைகளை மேற்கொண்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபரிடம் விளக்கம் கோரியுள்ளது.
இதற்காக பொலிஸ் மா அதிபருக்கு 24 மணிநேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
காலி முகத்திடல் மைதானத்திற்கு பெற்றோருடன் வந்த இரண்டு சிறு பிள்ளைகளை பொலிஸார் கொடூரமாக தாக்கிய காட்சிகள் உலகளவில் சமூக ஊடகங்களில் வைரலாகி, பொலிஸார் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் மீது கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்
இதன்போது தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை (9) இரவு விடுவிக்கப்பட்டார், எனினும் சிறுவன் ஏன் கைது செய்யப்பட்டார் என்பது குறித்து பொலிஸார் எந்த விளக்கமளிக்கப்படவில்லை.
இதேவேளை நேற்று ஞாயிற்றுக்கிழமை (9) காலி முகத்திடல் மைதானத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் இன்று சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி முதல் போராட்டத்துக்கு பங்களிப்புச் செய்து உயிரிழந்த செயற்பாட்டாளர்களை நினைவுகூரும் வகையில் பொதுமக்கள் குழுவொன்று இந்த நினைவேந்தலை ஏற்பாடு செய்திருந்தது.
எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டம்
தொடங்குவதற்கு முன்பே, நூற்றுக்கணக்கான ஆயுதம் ஏந்திய பொலிஸார் தலையிட்டதால், பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam