உலக வரலாற்றில் இலங்கையில் இடம்பெறும் முதல் சம்பவம்! புதிய சட்டச்சிக்கலுக்குள் ரணில்! பேராசிரியர் தகவல் (Video)
நாட்டின் தற்போதைய அரசியல் நிலை இலங்கை வரலாற்றில் ஒரு போதும் இடம்பெற்றதில்லை. உலக வரலாற்றில் கூட இவ்வாறாக நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதி முறைமை உள்ள நாட்டில், அந்த நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதி தனது பதவியை இராஜிராமா செய்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் ஜனாதிபதியை தேர்தெடுப்பது என்பது உலக வரலாற்றில் கூட இடம்பெறாத ஒரு சம்பவம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இருக்கக்கூடிய சட்ட ரீதியான ஏற்பாடுகள் தொடர்பிலும், ஜனாதிபதி தெரிவின் பின்னர் இருக்கக்கூடிய ஏற்பாடுகள் தொடர்பிலும் முழுமையான தகவல்களை எமது ஊடறுப்பு நிகழ்ச்சியை காணலாம்,