9ஆம் திகதி போராட்டம் வெடிக்கும்! பகிரங்கமாக அறைகூவல் - செய்திகளின் தொகுப்பு
எதிர்வரும் ஒன்பதாம் திகதி அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் இணைந்து ரணில் ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் கட்டளை பிறப்பிக்க உள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதியும், ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினருமான வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில்வைத்து அவர் இந்த அறைகூவலை விடுத்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில், ரணில் ராஜபக்ச கலப்பு அரசாங்கத்தை அமைத்தாலும் அது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு அல்ல.
ரணில் விக்ரமசிங்க அதிபர் நாற்காலியில் அமர்வதற்கு முன்னர் போராட்டம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களையும் முன் வைத்திருந்தார். நாற்காலியில் அமர்ந்த பின்னர் போராட்டம் சட்டவிரோதமானது, பாசிசவாதம் கொண்டது எனக் கூறுவது தவறானது என தெரிவித்துள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,