நாட்டில் மீண்டும் தொடர் போராட்டத்திற்கு தயாராகும் குழுவினர்
அரசாங்கத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களை மேற்கொள்ள பல்வேறு தரப்பினர் தயாராகி வருகின்றனர்.
அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிச் சட்டத்திற்கு எதிராக இவ்வாறு தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி இந்த தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதற்கு முன்னதாக எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளனர்.
தொடர் வேலைநிறுத்தம்
வருமான வரித் திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் பொறியியல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் உட்பட இலங்கையிலுள்ள பல நிபுணர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கில் இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam
