போராட்டக்கள செயற்பாட்டாளர்களினால் தொடுக்கப்பட்ட வழக்கு! சட்ட மா அதிபர் திணைக்களத்தின் நிலைப்பாடு
கோட்டா கோ கம போராட்டக்கள செயற்பாட்டாளர்களினால் தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில் தேசபந்து தென்னகோன் சார்பில் முன்னிலையாக முடியாது என்று சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
கோட்டா கோ கம செயற்பட்டாளர்களான கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஜீவந்த குணசேகர ஆகியோர் தாங்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றைத் தொடுத்துள்ளனர்.
வழக்கு விசாரணை
குறித்த வழக்கு நீதிபதிகள் எஸ்.துரைராஜா மற்றும் ஜனக் டி சில்வா மற்றும் மகிந்த சமயவர்த்தன ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் போது வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சார்பில் முன்னிலையாக முடியாது என்று சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் உச்சநீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தேசபந்து தென்னகோன் சார்பில் தனிப்பட்ட சட்டத்தரணியொருவர் உச்சநீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
