இலங்கை ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் தலைவர் அர்ஜுன டி சில்வா பதவி விலகல்
இலங்கை ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் தலைவர் அர்ஜுன டி சில்வா, எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் தனது பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.
இந்த பதவியில் இருந்து அவர் விலகுவதன் மூலம் அவர், சிறிலங்கா கிரிக்கெட்டின் கடமைகளில் இருந்தும் விடுவிக்கப்படுவார்.
பதவி விலகல்
கொழும்பில் உள்ள, தமது அலுவலக தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அர்ஜுன டி சில்வா தனது முடிவை அறிவித்துள்ளார்.
அர்ஜுன டி சில்வா 2011 ஆம் ஆண்டு முதல், இலங்கை ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
இந்தநிலையில், பதவி விலகுவது தனது சொந்த முடிவு எனவும், எந்தவொரு தரப்பிலிருந்தும் தேவையற்ற அழுத்தங்கள், இதற்கு காரணம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
