உலகில் பார்வையிட சிறந்த நாடுகளில் முன்னிலை பெற்றுள்ள இலங்கை
2025 ஆம் ஆண்டில் உலகில் பார்வையிட சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தில் பெயரிடப்பட்டுள்ளது.
முன்னணி பயண வலைத்தளமான Kayakஇன் பயண மதிப்பாய்வு அறிக்கையில் ஸிம்பாப்வே முதலிடத்தில் இருப்பதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
லிதுவேனியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது,
விமான பயண தேடல்
மேலும் 2025 கோடையில் Kayak இன் முதல் 10 விமான பயண தேடல்களில் கொழும்பு நகரமும் இடம்பிடித்தது.
பட்டியலில் தென் கொரியா நான்காவது இடத்தையும், அர்ஜென்டினா ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.
மொராக்கோ ஆறாவது இடத்தையும், நோர்வே ஏழாவது இடத்தையும் வென்றுள்ளது.
பட்டியலில் மால்டோவா எட்டாவது இடத்திலும் ஹொங்கொங் ஒன்பதாவது இடத்திலும் டென்மார்க் பத்தாவது இடத்திலும் உள்ளன.




