கடும் நெருக்கடியில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு பிரிவு
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் ஆட்களை நியமிக்கும் நடைமுறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் வேகமாக நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
அனுபவம் வாய்ந்த திறமையான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக சங்கத்தின் தலைவர் திசர அமரானந்த தெரிவித்தார்.
ஆனால் தற்போதுள்ள வெற்றிடங்களுக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்படாவிடில், வேறு தரப்பினர் அதில் இணைக்கத் தயாராக இருந்தால், அது பாரிய பிரச்சினையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்வேறு நபர்கள் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் திசர அமரானந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.