சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை
சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் ஒப்பந்தம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கோரியுள்ளார்.
இதன்மூலம் அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் குறித்து நாமும், நாடும் ஓரளவு புரிந்து கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள நிபந்தனைகள்
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கருத்து தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள நிபந்தனைகளை நாடாளுமன்றத்தில் முன்வைப்பது அத்தியாவசியமான விடயம் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி கூறுகையில், பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக இருந்த காலத்தில், சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்படும் பணியாளர் மட்ட உடன்படிக்கை தொடர்பான நிபந்தனைகளை வெளியிடுமாறு அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தற்போதைய ஜனாதிபதி கோரியிருந்தார்.
எனினும் அந்த உடன்படிக்கைகளை இப்போது வெளியிடுமாறு கோரப்படுகின்ற போதிலும் அவர் அதனை ஏன் வெளியிடவில்லை என்று என கேள்வியெழுப்பியுள்ளார்.