இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியாவின் வலியுறுத்தல்
தமிழர்கள் உட்பட தனது அனைத்து குடிமக்களின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கான, தனது உறுதிமொழிகளை விரைவில் செயல்படுத்துவதற்கு "அர்த்தமுள்ள வகையில்" செயல்படுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்தியுள்ளது.
"இலங்கையின் நெருங்கிய அண்டை நாடாகவும் நண்பராகவும், 2009ஆம் ஆண்டு முதல் இலங்கையின் நிவாரணம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்புச் செயன்முறைகளுக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது" என ஜெனிவாவில் உள்ள ஐ. நா சபை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே தெரிவித்துள்ளார்.
சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் அமைதிக்கான தமிழர்களின் அபிலாஷைகளை ஆதரிக்கும் இரண்டு அடிப்படைக் கொள்கைகளை இந்தியா ஆதரித்து வருகிறது.
இந்தியா ஊக்குவிக்கும் விடயங்கள்
அத்துடன் இலங்கையின் ஐக்கியம், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை, இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளையும் இந்தியா ஊக்குவிப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையின் ஊடாடும் உரையாடலின் போது பாண்டே கூறியுள்ளார்.
சமத்துவம், நீதி மற்றும் அமைதிக்கான தமிழர்களின் அபிலாஷைகளையும், 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்தி இலங்கையில் தமிழர்களுக்கு மரியாதை மற்றும் கண்ணியமான வாழ்வை உறுதி செய்வதற்கும் இலங்கை அரசாங்கம் உறுதியளிக்கும் என்று இந்தியா நம்புவதாக பாண்டே குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள சிறுபான்மை தமிழ் சமூகம் தமக்கான அதிகாரப் பகிர்வை வழங்கும் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி வருகின்றது.
13வது திருத்தம், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் கொண்டு வரப்பட்டது. இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தற்காலிக இணைப்புடன் 9 மாகாணங்களை பகிர்ந்தளிக்கப்பட்ட அலகுகளாக உருவாக்கியது.
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்தல்கள்
இந்தநிலையில் தேர்தல் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையைத் தொடர்ந்து ஒன்பது மாகாணங்களுக்கான தேர்தல்கள் 2018 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தற்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்றத் திருத்தம் தேவைப்படுகிறது என்று பாண்டே தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தனது உறுதிமொழிகளை செயல்படுத்துவது குறித்து இலங்கை அரசாங்கத்தின் மறுஉறுதிப்படுத்தலை கவனத்தில் கொண்டுள்ளது.
இருப்பினும், அதற்கான முன்னேற்றம் போதுமானதாக இல்லை, கடந்த வருடத்தில் இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் அதன் பொருளாதார சவால்களை சமாளிக்க இந்தியா நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பலமுனை ஆதரவை வழங்கியுள்ளதாக பாண்டே தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 1 நாள் முன்
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம்](https://cdn.ibcstack.com/article/c086643b-4386-4919-8492-877ed0286d6e/25-67aa28d83ab09-sm.webp)
பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம் News Lankasri
![அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை](https://cdn.ibcstack.com/article/4e34cc60-9f22-4aa1-8495-039a232e3650/25-67a9a117782a9-sm.webp)