பிள்ளையை காப்பாற்ற தன்னுயிரை தியாகம் செய்த தமிழ் தாய் தொடர்பான தகவல்
கம்பளை - நுவரெலியா பிரதான வீதியில் றம்பொடை பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தில், குழந்தையின் உயிரை காப்பாற்றிய பின்னர் உயிரிழந்த தாயின் இறுதிக்கிரியை இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11ஆம் திகதி ஏற்பட்ட பேருந்து விபத்தில் குறித்த பெண்ணும், கணவனும் உயிரிழந்த நிலையில், 9 மாத குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பதுளை, கொஸ்லாந்தை பகுதியைச் சேர்ந்த 44 வயதான தனலக்சுமி, 48 வயதான காசிராஜன் ஆகியோர் உயிரிழந்தனர்.
தமிழ் தாய்
குறித்த இருவரின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெறுவதாக உறவினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தன் குழந்தையை காப்பாற்றும் நோக்கில் பேருந்தில் நசுங்கிய நிலையிலும், நீண்ட நேரம் போராடிய நிலையில் தனலக்சுமி உயிரிழந்தார்.
இதன் காரணமாக உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாட்டு ஊடகங்களிலும் தாய்மையின் வலிமை தொடர்பில் அதிகம் பேசப்பட்டார்.
இதேவேளை, றம்பொடை கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்திருந்தது. எனினும் 30இற்கும் மேற்பட்டவர்கள் இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 7 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
