இந்திய - இலங்கை உறவு தொடர்பில் இந்திய அமைச்சர் வெளியிட்ட தகவல்: செய்திகளின் தொகுப்பு
இந்தியாவின் உதவியால், இலங்கையின் இருண்ட தருணத்தில் முக்கியமான மாற்றம் ஏற்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய - இலங்கை உறவு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், இந்திய தேசம் ஒரு பிராந்திய தலைமை தேசமாக மாத்திரமல்ல, அதன் அண்டை நாடுகளுக்கு, குறிப்பாக இலங்கையின் அண்மைய பொருளாதார நெருக்கடியின் போது ஒரு முக்கியமான உயிர் நாடியாக செயற்பட்டது.
இந்தநிலையில் இலங்கைக்கான இந்தியாவின் அசைக்க முடியாத ஆதரவை அவர் எடுத்துரைத்துள்ளார்.
உலகின் பிற நாடுகள் என்ன செய்வது என்று விவாதித்துக் கொண்டிருந்தபோது உண்மையில் இந்தியாவே இலங்கைக்கு உதவி செய்தது. இந்த வேகமும் நம்பகத்தன்மையும் இந்தியாவை நம்பகமான பிராந்திய நட்பு நாடாக சித்தரிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான முழுமையான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |