ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் செயற்பட்ட ரகசியம் - யாரும் அறிந்திராத தகவல்
சிரேஷ்ட ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான விக்டர் ஐவன் மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றது.
நெலும் மாவத்தை பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விசேட சந்திப்பில் விக்டர் ஐவன் மற்றும் சமூக ஆர்வலர்கள் இருவர் இணைந்து கொண்டனர்.
பசில் ராஜபக்ஷவுடன் பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சாகர காரியவசம், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
அண்மைய ஆட்சி மாற்றத்திற்கு அடிப்படையான போராட்டம் தொடர்பில் பசில் ராஜபக்ஷ மற்றும் விக்டர் ஐவன் ஆகியோர் விசேட கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர்.
போராட்டத்தைப் பாதித்த சமூகப் பிரச்சினைகளில் பலராலும் கவனிக்கப்படாத சாதி அழுத்தமும் இருந்ததாக விக்டர் ஐவன் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும், போராட்டம் குறித்து சிறப்பு ஆய்வை மேற்கொண்டதாகவும், இலங்கையில் வலுவான சமூகப் பிரச்சனையாக உள்ள சாதி ஒடுக்குமுறையை இல்லாதொழிக்க அரசியல் கட்சிகள் தலையிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கடுமையாக விமர்சிக்கும் விக்டர் ஐவனுக்கும், பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்றரை மணிநேரம் மிகவும் சுமுகமாக இடம்பெற்றது.
