அகற்றப்பட்ட ஆறுமுக நாவலரின் புகைப்படம்! வடமாகாண ஆளுநருக்கு நாவலர் பெருமானின் கொள்ளுப் பேரன் முறைப்பாடு
யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர் ஜெயசீலன் நல்லூரில் உள்ள நாவலர் கலாசார மண்டபத்தில் ஸ்ரீல ஸ்ரீ ஆறுமுக நாவலரை அவமதித்துள்ளதாக வடமாகாண ஆளுநருக்கு நாவலர் பெருமானின் கொள்ளுப் பேரன் முறைப்பாடு வழங்கியுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.
குறித்த முறைப்பாட்டில் யாழ். நாவலர் மண்டபத்தில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் புகைப்படம் மண்டபத்தில் நிறுவப்பட்டு வணங்கப்பட்டது.
ஆனால் தற்போது அங்கிருந்து படம் அகற்றப்பட்டுள்ளது. ஆணையாளர் ஜெயசீலனின் அறிவுறுத்தலின்படி, இந்து சமயப் பண்பாட்டுத் திணைக்களத்திற்குச் சொந்தமான இந்தக் கட்டிடத்தைக் கைப்பற்றி புதுப்பிப்பதை எதிர்த்த ஜெயசீலன் , நூல் வெளியீட்டு விழாவிற்காக ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் புகைப்படத்தை அவமதித்து அகற்றிவிட்டு, அதை கீழே வைத்துள்ளமை ஆதாரத்துடன் தகவல் கிடைத்துள்ளது.
நாவலரின் படத்தை உரிய இடத்தில் வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதோடு அது வரை
எவ்வித நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கக் கூடாது.
மேலும் நாவலர் பெருமானை அவமதித்த மாநகர ஆணையாளர் மீது உடனடி நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கடிதம் நாவலரின் கொள்ளுப் பேரனால்
அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.