அருள்மிகு ஸ்ரீ கண்டி கதிர்காம ஆலயம் வருடாந்த மகோற்சவ பெருவிழா
வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ கண்டி கதிர்காம ஆலய வருடாந்த வைகாசி விசாக தேர்த்திருவிழா ஆரம்பமாக உள்ளது.
குறித்த மகோற்சவ பெருவிழாவானது எதிர்வரும் 22 ஆம் திகதி காலை பால்குட பவனியுடன் ஆரம்பமாகி மாலை இரதோற்சவத்துடன் இனிதே நிறைவடையவுள்ளது.
இரதோற்சவம்
115 வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக கண்டி மாநகர் முழுவதும் எழுந்தருள இருக்கும் ஆறுமுகப்பெருமானுக்கு தங்கள் வியாபார ஸ்தலங்களிலும், வீடுகளிலும் பூரண கும்பம் வைத்து அர்ச்சனை செய்து முருகனின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
இதன்போது, ஆலயத்திலிருந்து தேர் புறப்பட்டு கொட்டுகொடல்ல வீதி (மேற்பக்கம்), தலதா வீதி வழியாக மணிக்கூண்டு கோபுரத்தை கடந்து, வடுகொடபிடிய வீதி, கொழும்பு வீதி, யடிநுவர வீதி (கீழ்ப்பக்கம்), ஹரஸ் வீதி (மேற்பக்கம்), கொட்டுகொடல்ல வீதியினூடாக கந்தே வீதிக்கு சென்று டி.எஸ் சேனாநாயக வீதி, ஹரஸ் வீதி (கீழ்ப்பக்கம்), கொட்டுகொடல்ல வீதி (மேற்பக்கம்), குமார வீதி (கீழ்ப்பக்கம்), யடிநுவர வீதி (மேற்பக்கம்), ரஐ வீதி (மேற்பக்கம்), டி.எஸ் சேனாநாயக வீதியினூடாக சென்று கொழும்பு வீதி (கீழ்ப்பக்கம்), கொட்டுகொடல்ல வீதி (கீழ்ப்பக்கம்) வழியாக மீண்டும் ஹரஸ் வீதி (மேற்பக்கம்), டி.எஸ் சேனாநாயக வீதி (மேற்பக்கம்), தலதா வீதி, யடிநுவர வீதி (கீழ்ப்பக்கம்), கொழும்பு வீதி (மேற்பக்கம்) கொட்டுகொடல்ல வீதி வழியாக ஆலயத்தை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |