செங்கலடி இரமேஸ்புரம் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலய பால்குட பவனி
மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க செங்கலடி இரமேஸ்புரம் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் அலங்கார உற்சவத்தில் ஆயிரகணக்கான அடியார்கள் பங்குகொண்ட பால்குட பவனி இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
செங்கலடி இரமேஸ்புரம் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 11ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றது.
பால்குட பவனி
சர்வதேச இந்துமத குருபீடாதிபதி - சபரிமலைக் குருமுதல்வர் மஹாராஜா ராஜகுரு கிரியா கலாபமணி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் இந்த உற்சவம் நடைபெற்று வருகின்றது.
இதனை முன்னிட்டு கொம்மாதுறை விநாயகர் ஆலயத்திலிருந்து ஆயிரகணக்கான அடியார்கள் பங்குகொண்ட பால்குட பவனி நடைபெற்றது.
இதன்போது மயிலாடிட்டம், ஒயிலாட்டம் என பல்வேறு கலை நிகழ்வுகளுடன் பால்குட பவனியானது ஆலயம் வரையில் நடைபெற்றது.
முருகப்பெருமானுக்கு பாலாபிசேகம்
ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று முருகப்பெருமானுக்கு பாலாபிசேகம் சிறப்பாக நடைபெற்றதுடன் விசேட பூஜை வழிபாடுகளும் நடைபெற்றன. இதன்போது பெருமளவான பக்த அடியார்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.





















நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 நாட்கள் முன்

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
