உள்ளூராட்சித் தேர்தலுக்கு ஆப்பு வைத்துள்ள ரணில்! ஸ்ரீநேசன்

SLPP Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Politician Economy of Sri Lanka
By Sachi Feb 28, 2023 08:25 AM GMT
Report

கடந்த 2020 நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த தற்போதைய ஜனாதிபதி ரணில், தனது கட்சி சார்பாக ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெற்றார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், தேசியப் பட்டியல் ஆசனம் மூலமாக காலம் தாழ்த்தி சங்கடத்துடன் நாடாளுமன்றத்தினுள் அவர் நுழைந்தார்.

மொட்டுக் கட்சியினரின் தவறான சமூக பொருளாதார அரசியல் சார்ந்த எதேச்சையான போக்குகளால், மக்களின் கிளர்ச்சி மூலமாக கோட்டாபய பதவி இழந்தார்.

உள்ளூராட்சித் தேர்தலுக்கு ஆப்பு வைத்துள்ள ரணில்! ஸ்ரீநேசன் | Sreenesan Commented On Rulers Who Lost Lok Sabha

மக்களாணையை இழந்த ஆட்சியாளர்கள்

மின்தடை, எரிபொருள் தட்டுப்பாடு, பணவீக்கம், பொருட்கள் தட்டுப்பாடு, அசுர விலையேற்றம் போன்ற விடயங்களால் ராஜபக்ச ஆட்சியாளர்கள் மக்கள் ஆணையை இழக்க நேர்ந்தது. 

ஆட்சியாளர்களின் பலவீனமான செயற்பாடுகள் ரணிலுக்கு பலத்தை அளித்தது, அதனால் ரணில் பிரதமராகிப் பின்னர் மக்களாணை இல்லாமல், நாடாளுமன்றம் மூலமாக ஜனாதிபதியுமானார். இது ஆச்சரியமான நிகழ்வாகும்.

தற்போதைய நிலையில் ஜனாதிபதி மற்றும் ராஜபக்ச தரப்பினர் மக்களாணையை இழந்து நிற்பதை அறிய முடிகின்றது. அண்மையில் 2023 ஜனவரி மாதத்தில் இலங்கை சுகாதாரக் கொள்கை நிறுவகம்  மாதிரி அபிப்பிராய வாக்கெடுப்பு ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில் ஜே.வி.பி 32 வீதம், ஐக்கிய மக்கள் சக்தி 31 வீதம், ஐக்கிய தேசியக் கட்சி 9 வீதம், பொதுஜனப்பெரமுன 8 வீதம், தமிழரசுக்கட்சி 5 வீதம், சுதந்திரக்கட்சி 1வீதம் என்றும், இதர கட்சிகள் 14வீதம் என்ற வகையிலும் அந்தத் தகவல் அமைந்தது.

உள்ளூராட்சித் தேர்தலுக்கு ஆப்பு வைத்துள்ள ரணில்! ஸ்ரீநேசன் | Sreenesan Commented On Rulers Who Lost Lok Sabha

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

இந்த ஆய்வறிக்கை ஜனாதிபதி மற்றும் மகிந்த தரப்பை அச்சமடையச் செய்திருக்கலாம். அதன் விளைவாக தேர்தலை ஜனாதிபதி ஒத்தி வைத்துள்ளார் என அறியப்படுகிறது.

உள்ளூராட்சித் தேர்தலி்ல் மக்களாணை ஆட்சியாளர்களுக்கு எதிராக அமைந்தால், அடுத்து நாடாளுமன்றத் தேர்தல், ஜனாதிபதி தேர்தல் என்பவற்றை நடாத்துமாறு, புதிதாக உள்ளூராட்சி சபைகளில் ஆணை பெற்ற கட்சிகள், மாற்றத்தை விரும்பும் மக்கள் பலமான பேரெழுச்சிகளை மேற்கொள்வர். அதனை ஆட்சியாளர்களால் எதிர்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும்.

இதனை ஆழமாகப் புரிந்த ஜனாதிபதி உள்ளூராட்சித் தேர்தலுக்கு ஆப்பு வைத்துள்ளார் என்பதே உண்மையான நிலைமையாகும்.

உள்ளூராட்சித் தேர்தலுக்கு ஆப்பு வைத்துள்ள ரணில்! ஸ்ரீநேசன் | Sreenesan Commented On Rulers Who Lost Lok Sabha

உள்ளூராட்சித் தேர்தலைத்தடுத்து நிறுத்தும் நோக்குடன் ஜனாதிபதி ஆற்றிய நாடாளுமன்ற உரை, சுமா‌ர் 85 சதவீதமான மக்களை எரிச்சலூட்டுவதாக அமைந்தது.

அவரது பேச்சு பொறுப்புணர்ச்சியோடு அமையாமல், நகைப்பும் நையாண்டியும் கலந்ததாக இருந்தது. மக்களை ஏமாளிகளாக்கும் கோமாளித்தனமான பேச்சாக அது அமைந்தது.

சுயாதீன தேர்தல் ஆணையகம்

இந்நிலையில், தனது அதிகாரத்தினால் சுயாதீன தேர்தல் ஆணையகத்தையும் செயலிழக்கச் செய்ய முடியும் என்பதை அப்பேச்சு வெளிப்படுத்தியது.

அதிகாரங்கள், கதிரைகள் என்பவை தற்காலிகமானவை என்பதை ஏறத்தாழ அரை நூற்றாண்டு நாடாளுமன்ற அனுபவமுள்ள ஜனாதிபதி ரணில் அறியாமல் இருப்பதுதான் ஆச்சரியமாகவுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தலில் தன்னையும், தனது கட்சியையும் பூஜியமாக்கிய ரணில், ராஜபக்சர்களின் அறிவீன செயற்பாடுகளால் ஹீரோவானார்.

இப்போது தனது மாமா ஜெயவர்த்தனவாக மாறி, அதிகாரத்தை உச்சமாக சுவைக்க ஆரம்பித்து விட்டார். இதற்கான எதிர்வினை, மக்கள் எழுச்சியாக கிளர்ச்சியாக இறுதியில் மக்கள் தீர்ப்பாக மாறும் என்பதை ஜனாதிபதி அறிந்தே தீருவார்.

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் அவர்கள் கூறியது போல் மொட்டுக்கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாதுகாத்தல், அவர்களுக்கு நட்டஈடு வழங்குதல், தேர்தலை நடத்தாமல் தவிர்த்தல் என்பவையே ஜனாதிபதியின் பிரதான முத்தொழில்களானதோ என்று மக்களை சிந்திக்க வைத்துள்ளது.

இதற்கான பதிலை மக்களும் எதிர்க்கட்சிகளும் விரைவாக அளிப்பார்கள் என்பதை எதிர்காலம் உணர்த்தும்.

அதிகாரத்தை சுவைத்தவர்கள் அதனை இழந்த பின்னர் அல்லற்படுவார்கள் என்பதை கோட்டாபய ஈராண்டுகளில் உணர்ந்தார்.தற்போதைய ஜனாதிபதியும் உணர்ந்தேயாவார் என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US