நுவரெலியாவில் வசந்தகால பேண்ட் வாத்திய அணிவகுப்பு ஒத்திகை..!
நுவரெலியாவில் ஒவ்வொரு வருடமும் வசந்த வசந்த காலத்தையொட்டி ஏப்ரல் மாதம் பல்வேறுபட்ட நிகழ்வுகள் இடம்பெறும் இவ்வருடமும் எதிர் வரும் முதலாம் திகதி உத்தியோகபூர்வமாக விழாக்கோலத்துடன் ஆரம்பமாக உள்ளது.
இதன் முதல் நாள் பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்திய அணிவகுப்பு குழுவினரின் இசை வாத்தியங்கள் முழங்க இவ்விழா அங்குரார்ப்பணம் செய்வது வழக்கமான விடயமாகும்.
வாத்திய அணிவகுப்பு ஒத்திகை
இதன் காரணமாக இன்று (29) நுவரெலியாவில் உள்ள 15 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவ குழுக்களின் பேண்ட் வாத்திய அணிவகுப்பு ஒத்திகை பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.
நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் அமைந்துள்ள விக்டோரியா பூங்கா பிரதான நுழைவாயில் அருகில் ஆரம்பிக்கப்பட்டு நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் அமைந்துள்ள விக்டோரியா பூங்கா நுழைவாயில் வரை சென்று நிறைவடைந்தது.
இதன் போது நுவரெலியா - பதுளை பிரதான விதியின் ஒரு பகுதி சில மணி நேரம் மூடப்பட்டு இந்த ஒத்திகை நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதேவேளை ஏப்ரல் மாத சித்திரை புத்தாண்டு விடுமுறை காலத்தில் அதிகளவான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வரவேற்று மகிழ்விக்க சகல ஆயத்தங்களும் நுவரெலியா மாநகரசபை ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
