மன்னாரில் இடம்பெற்ற தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள்
மன்னார் மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.
குறித்த போட்டிகள், மன்னார் நகரசபை மைதானத்தில் நேற்று (13.03.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
அத்துடன், இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டுள்ளார்.
மாற்றாற்றல் போட்டிகள்
மேலும், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
@tamilwinnews மாற்று திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி #Lankasrinews #Tamilwinnews #Mannar #Srilanka ♬ original sound - தமிழ்வின் செய்திகள்
இதன் போது, மாற்றாற்றல் கொண்டவர்களின் பல்வேறு போட்டிகள் இடம் பெற்றதோடு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |