சிறுவர்களின் உள சிகிச்சைக்கு உதவும் தன்னெழுச்சி நடனம்
இன்றைய வேகமான உலகில், சிறுவர்கள் டிஜிற்றல் யுகத்தால் சூழப்படுகிறார்கள். இதனால் அதிகரித்து வரும் சவால்களை எதிர்கொள்கின்றனர், இது அவர்களின் உணர்ச்சி, உடல் மற்றும் மன நலனை பாதிக்கின்றன.
கல்வி சார்ந்த அழுத்தங்கள் முதல் சமூக கவலைகள் வரை மனநலப்பாதிப்புக்கான காரணங்களாகின்றன. பயனுள்ள சிறுவர் செயற்பாடுகளின் தலையீடுகளின் தேவை மிகவும் முக்கியமானதாக உள்ளது.
ஒரு சக்திவாய்ந்த ஆனால் பெரும்பாலும் கவனிக்கப்படாத சிகிச்சை முறையாக ‘தன்னெழுச்சி நடனம்’ இனங்காணப்படுகின்றது.
நடனம், அதன் உடல் செயல்பாடு, படைப்பாற்றல், தன்னெழுச்சி வெளிப்பாடு மற்றும் சமூக தொடர்பு ஆகியன இணைந்து ஒரு சக்திவாய்ந்த செயற்பாடாகவுள்ளது.
தன்னெழுச்சி நடனம்
சிறுவர்களுக்கு குறிப்பாக பயனுள்ளதாக தன்னெழுச்சி நடனம் காணப்படுகிறது. இது உள ஆரர்க்கியத்திற்கான, குணப்படுத்துவதற்கான ஒரு முழுமையான செயலியக்கத்தை, அணுகுமுறையை கொண்டுள்ளது.
ஒருவர் நடனமாடும் போது அவரின் உணர்ச்சி, அறிவாற்றல், உடல் மற்றும் சமூக ஒருங்கிணைப்பை அடைய உதவும் இயக்கத்தைப் பெறமுடியும். சிறுவர்களுக்கு, தன்னெழுச்சி நடனத்தில் காணப்படும் விளையாட்டு, படைப்பாற்றல் மற்றும் வெளிப்பாடு ஆகியவற்றின் உள்ளார்ந்த குணங்கள் காரணமாக பயனுள்ள விளைவுகளைக் கொடுக்கிறது.
இங்கு முதலில் தன்னெழுச்சியான நடனம் என்றால் என்ன? என்பதை விளக்க வேண்டும். தன்னெழுச்சி நடனம் சீராக ஒரு கிரமமான முறையில் நடனம் பயின்று ஆடும் பொறிமுறையைக் கொண்டிருப்பதில்லை.
இது ஒரு தாளத்திற்கு அல்லது இசைக்கு ஒருவர் தன்பாட்டில் விட்டாத்தியாக அசைவதைக் குறிக்கும். இங்கு நடனம் பயின்றவர் தான் ஆடவேண்டுமென்ற விதியில்லை. யாரொருவரும் ஆடலாம்.
ஆடமுயற்சிக்கலாம் அதில் வெற்றியும் பெறலாம். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு தாளஅமைவு காணப்படும் அது சீரொழுங்கான அசைவியக்கத்தோடு தொடர்புடையது. இந்த உட்பொதிந்திருக்கும் தாள அமைவை தன்னெழுச்சி நடனம் வெளிக்கொணரும். அது பேரின்பத்தைத் தரும்.
தன்னெழுச்சி நடனத்தில் பங்கு கொள்வதால் ஏற்படும் பயன்கள் என்ன?
1.உணர்ச்சிப் வெளிப்பாடு நடனம் சிறுவர்களுக்கு அவர்களின் உணர்ச்சிகளை வாய்மொழியாக இல்லாமல் வெளிப்படுத்த பாதுகாப்பான இடத்தை வழங்குகிறது. நடத்தில் இயக்கத்தின் மூலம், ஒரு சிறுவன் தனது அடக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும். வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாதவற்றை, அதாவது மகிழ்ச்சி, கோபம், சோகம் அல்லது பயம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த முடியும்.
அதிர்ச்சியை அனுபவித்த அல்லது வாய்மொழியாக தொடர்புகொள்வதில் சிரமம் உள்ள குழந்தைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நடனம் அவர்கள் மறைந்திருக்கும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த அனுமதிக்கிறது, அதன் மூலம்; குறிப்பிடத்தக்க உணர்ச்சி நிவாரணம் மற்றும் தெளிவுக்கு வழிவிடுகிறது.
உடல் ஆரோக்கியம்
2. உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. நடனம் என்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முழு உடல் செயல்பாடு. இது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, தசை வலிமையை உருவாக்குகிறது, நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது, உடல், உள ஆரோக்கியம் ஒருங்கிணைப்பு மற்றும் சமநிலையை ஊக்குவிக்கிறது. சிறுவர்களைப் பொறுத்தவரை, நடனம் மூலம் வழக்கமான உடல் செயல்பாடு ஊக்கிவிக்கப்படுகிறது. அதன் மூலம் ஆரோக்கியமான தூக்கத்திற்கு வழிகிடைக்கிறது.
அதே வேளை சிறுவர்களின் மேம்பட்ட ஆற்றல் மட்டங்களை அடைவதற்கும்; பங்களிக்கும், மேலும் அவர்களை தினசரி நடவடிக்கைகளுக்கு உற்சாகத்தை ஊட்டி தயார்படுத்துகிறது.
3. அறிவாற்றல் நன்மைகள் நடனத்தில் ஈடுபடுவதற்கு நினைவாற்றல், கவனம் மற்றும் இடஞ்சார்ந்த விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு அறிவாற்றல் திறன்களைப் பயன்படுத்த வேண்டும்.
நடன நடைமுறைகளைக் கற்றுக்கொள்வது அல்லது அசைவுகளை மேம்படுத்துவது குழந்தையின் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்தலாம், அதாவது சிக்கலைத் தீர்ப்பது மற்றும் விமர்சன சிந்தனை போன்றவை வளர்கின்றன. மேலும், நடனத்தில் உள்ள தாள வடிவங்கள், கல்வி கற்றலில் முக்கியமான திறன்களான நேரம், வரிசை பற்றிய குழந்தையின் புரிதலை மேம்படுத்தலாம்.
4. சமூக நன்மைகள் தன்னெழுச்சியான நடனம் என்பது முறைசாரா விளையாட்டுப்போன்றது, இதில் குழுச் செயல்பாடுகள் உள்ளடங்கியுள்ளன.
குழு நடன நடவடிக்கைகளில் பங்கேற்பது சிறுவர்கள்; ஒத்துழைப்பு மனப்பாங்கை வளர்த்துக்கொள்ள துணைநிற்கின்றது. அதே போல பச்சாதாப மனப்பாங்கு வளர்ச்சிக்கும் துணைநிற்கிறது.
சிறுவர்கள் மற்றவர்களுக்கு முன்னால் செயல்பட கற்றுக்கொள்கிறார்கள். இது தன்னம்பிக்கையை வளர்க்கிறது.
இதனால் சுயமரியாதை உணர்வு அதிகரிக்கும். கூச்ச சுபாவமுள்ள அல்லது உள்முகச் சிந்தனையுள்ள (ஒதுங்கியிருக்கும்) குழந்தைகளுக்கு, நடனம் நண்பர்களை உருவாக்குவதற்கும் சமூக இணைவுக்குமான நுழைவாயிலாக இருக்கும். சிறுவர்களுக்கான நடனம் ஒரு சிகிச்சையாக செயல்படும் திறன் கொண்டது.
சிறுவர்களின் மனச்சோர்வு மற்றும் பதட்டத்தின் அறிகுறிகளைக் கணிசமாகக் குறைக்கும். அதிர்ச்சி அல்லது நெருக்கீடுகளலால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இயல்புநிலைக்கு திரும்புவதற்கு வாய்ப்பை வழங்குகின்றன.
சிறுவர்களுக்கு பாதுகாப்பு
தன்னெழுச்சியான நடனம் சிறுவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை மீட்டெடுக்க உதவும். நடன ஒரு சிகிச்சை அதனால் சிறுவர் அரங்கச் செயற்பாடுகளில் நடனத்திற்கு அதிக வாய்ப்பு வழங்கப்படுகின்றது.
இதனால், சிறுவர்களின் நடத்தை, உணர்ச்சி கட்டுப்பாடு மற்றும் கல்வி செயல்திறன் ஆகியவற்றில் முன்னேற்றங்களை இனங்காணமுடியும்.
முடிவாக, நடனம் சிகிச்சையாக சிறந்த பலனைத் தரவல்லது. சிறுவர்களின் நல்வாழ்வை ஆதரிக்கிறது, தனித்துவமான மற்றும் பன்முக அணுகுமுறையை வழங்குகிறது. உடல் செயல்பாடுகளை உணர்ச்சி மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியுடன் இணைக்கும் அதன் விசேட திறன் காரணமாக சிறுவர்கள் முன் காணப்படும் பலவிதமான சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாக அமைகிறது.
தன்னெழுச்சி நடனத்தின் பயன்கள், நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு வளரும்போது, அதிகமான பெற்றோர்கள் அதன் திறனை அங்கீகரித்து, சிறுவர்களின் வளர்ச்சிப் படிமுறையில்; அந்த அணுகுமுறையையும் இணைத்துக்கொள்வார்கள்.
மகிழ்ச்சி, சுதந்திரமான இயக்கம் என்பன ஆராக்கியமான சிறுவர்; வளர்ச்சியின் அடிப்படையாகும். இதனை நல்லூர் நாடக இரவு நிகழ்ச்சிகள் வழங்குகின்றன.