லண்டனில் அதிரடியாக கைது செய்யப்பட்ட150 பேர்..
லண்டனில் பலஸ்தீன நடவடிக்கை பிரச்சாரக் குழுவை அரசாங்கம் தடை செய்ததற்கு எதிராக நடந்து வரும் ஆர்ப்பாட்டத்தில் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் ரோயல் விமானப்படை தளத்தில் இரண்டு போர் விமானங்களை சேதப்படுத்தியதையடுத்து, Palestine Action அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்டனர்.
150 பேர்கள் கைது
இந்த நிலையில், அந்த அமைப்புக்கு ஆதரவாக இன்று(6) பிற்பகல் மத்திய லண்டனில் உள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் சுமார் 15,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் குவிந்தனர்.
பதட்டமான சூழலில் பொலிசார் தாக்குதலை மேற்கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் காயங்களுடன் தப்பித்துள்ளனர்.
Palestine Action அமைப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தியே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டரில் நடந்த பேரணியில் அதிகாரிகள் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரை கைகளால் தாக்கியும், உதைத்தும், எச்சில் துப்பியும், பொருட்களை வீசியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
மேலும், அதிகாரிகளுக்கு எதிரான எந்தவொரு தாக்குதலும் பொறுத்துக்கொள்ளப்படாது, ஏற்கனவே கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அதிகாரிகளுக்கு எதிரான எந்தவொரு தாக்குதலும் பொறுத்துக்கொள்ளப்படாது, ஏற்கனவே கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Palestine Action அமைப்பு
பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படும் என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
Palestine Action அமைப்புக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்படும் சிக்கலுக்கு உள்ளாகினர்.
முன்னாள் உள்விவகார செயலர் Yvette Cooper தலைமையிலான நிர்வாகமே Palestine Action அமைப்பை தடை செய்தது. இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் சுமார் 150 பேர்கள் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டம் தொடங்கிய 12வது நிமிடத்தில் முதல் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் இடையே, நாடாளுமன்ற சதுக்கத்தில் உள்ள நெல்சன் மண்டேலா சிலையின் கையில் பாலஸ்தீனக் கொடி ஒன்று கட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வின்ஸ்டன் சர்ச்சிலின் சிலையைச் சுற்றி பொலிசார் தடையை அமைத்திருந்தனர், சர்ச்சில் சிலை மட்டுமே பொலிஸாரால் பாதுகாக்கப்பட்ட ஒரே நினைவுச்சின்னமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



