தந்தை செல்வா இருந்த தூய்மையான ஆசனத்தின் தூய்மையை கெடுக்கின்றனர் - வீ.ஆனந்தசங்கரி

People Kilinochchi
By Sudaron Apr 26, 2021 11:11 AM GMT
Report

தந்தை செல்வா இருந்த தூய்மையான ஆசனத்தின் தூய்மையைக் கெடுக்கின்றனர் என வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற மறைந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஷ்ட ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான தந்தை செல்வாவின் நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தந்தை செல்வாவின் திரு உருவச் சிலைக்குத் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து நினைவுரையாற்றிய ஆனந்தசங்கரி குறிப்பிடுகையில்,

தந்தை செல்வாவோடு நெருங்கி பழகியவன் நான். அவரது பிறந்த தினத்தன்று போடப்பட்ட மாலையைப் பிய்த்து என் மேல் வீசி ஆசீர்வதித்தார். அதுதான் அவரது இறுதி பிறந்த தினமாகும். அடுத்து வந்த நாட்களில் அவர் உயிர் பிரிந்தார்.

இன்று அவரை வைத்து அரசியல் செய்கின்றனர். தந்தை செல்வாவின் கொள்கை, அவரது இலட்சியம் பற்றி அறியாதவர்கள் இன்று பெரியவருக்கு மாலை போடுவதற்கு முண்டியடிக்கின்றனர். அவரை வைத்து அரசியல் செய்கின்றனர்.

தந்தை செல்வாதான் தமிழரசு கட்சியை உருவாக்கினார் என்பது உலகறிந்த உண்மை. நானும் உறுதியாகச் சொல்கிறேன். ஆனால் அவர் அந்த கட்சியை இல்லாது செய்துவிட்டு தமிழர் விடுதலைக்கூட்டணியை உருவாக்கினார்.

அதன் பின்னர் தமது சுயநலத்திற்காகத் தமிழரசு கட்சியை மீண்டும் கொண்டுவந்தனர். உண்மையில் அது தந்தை செல்வாவிற்கு செய்த துரோகமேயாகும்.

அந்த பெரும் தூய்மையான மனிதர் இருந்த தமிழரசு கட்சியின் கதிரையில் சேனாதிராயா இருப்பது, தூய்மை என்ற சொல்லைக் கேள்விக்குட்படுத்துகின்றது. பொருத்தமான தலைவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.

பிரதேச சபைக்கும், மாகாணசபைக்கும் ஆசைப்படும் அரசியலிற்காகத் தந்தை செல்வாவை பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US