ஆளும் கட்சியின் பின்வரிசைக்குள் பிளவு
ஆளும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தற்போது தனித்தனியாக ஊடகவியலாளர் சந்திப்பை நடத்துவதற்கு இந்த பிளவே காரணம் எனக் கூறப்படுகிறது.
அரசாங்கத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடந்த தினங்களில், தமது உத்தியோகபூர்வ இல்லங்களில் தனித்தனியாக செய்தியாளர் சந்திப்பை நடத்தி இருந்தனர்.
அரசாங்கத்தில் உயர் மட்டத்தில் இருக்கும் ஒருவரது தேவைக்கு அமைய இந்த செய்தியாளர் சந்திப்புகள் நடத்தப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கைக்கு அமையவே சுசில் பிரேமஜயந்த ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராச்சி கூறியமைக்கு பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது.
டிசம்பர் மாத சிறப்பு பலன்கள்: நான்காம் இடத்தில் உச்சம் பெறும் குரு! மேஷத்துக்கு ஜாக்பாட் உறுதி Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam