கொத்மலை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறப்பு: வெளியான முன்னெச்சரிக்கை அறிவிப்பு
கடும் மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நான்கு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
இதனால் நீர்த்தேக்கத்திற்கு கீழ் கொத்மலை ஓயாவனை அண்மித்து வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் கனத்த மழையுடன் ஹட்டன் கொழும்பு ஹட்டன் நுவரெலியா வீதிகளில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
தாழ் அமுக்கம்
அத்துடன் அடிக்கடி கடும் மழையுடன் பனிமூட்டமும் காணப்படுகின்றன. எனவே இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வங்கள விரிகுடாவில் ஏற்பட்ட தாழ் அமுக்கம் காரணமாக நாட்டின் பல மாவட்டங்களுக்கு இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
நாட்டில் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, கொத்மலை காமினி திஸாநாயக்க நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளின் செயல்பாடு குறித்து இலங்கை மகாவலி அதிகாரசபை ஒரு முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இன்று (26) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின்படி, நீர்த்தேக்கத்தின் தற்போதைய நிலை பின்வருமாறு உள்ளது.
தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் மழையினால் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக அதிகரிக்கக்கூடும் என்பதால் பின்வரும் பகுதிகளில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேவையான நடவடிக்கை
கொத்மலை ஓயா - நுகவெல, ஆற்றங்கரைப் பகுதி மற்றும் மாவத்துர பகுதி. மகாவலி ஆறு - உலப்பனே முதல் கம்பளை, வெலிகல்ல, கெலிஓயா, பேராதெனிய, கட்டுகஸ்தோட்டை, மற்றும் பொல்கொல்ல வரையிலான பகுதிகள்.
நீர்த்தேக்கத்தின் மேலதிக நீர் வழிந்தோடும் கதவுகள் திறக்கப்படுவதற்கு முன்பு மேலும் ஒரு அறிவிப்பு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மகாவலி ஆற்றின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, நீர்த்தேக்கத்திலிருந்து நீரை வெளியேற்றாமலேயே ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகளை மூழ்கடிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, ஆற்றைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறும், தங்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலதிக தகவல்- அனதி
தீவிரமடையும் வானிலையினால் பல பகுதிகளுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri
பாக்ஸ் ஆபிஸ்: தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் 2.. 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் Cineulagam
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri