ஒரு லீற்றர் பெட்ரோலை பெற ஒரு லீற்றர் பெட்ரோலை செலவழிக்க வேண்டியுள்ளதாக குற்றச்சாட்டு

Batticaloa Sri Lanka Fisherman Petrol diesel price
By Bavan Mar 19, 2026 07:07 AM GMT
Report

மட்டக்களப்பு கடற்தொழிலாளர்கள் மீன்பிடி இயந்திர படகுக்கு ஒரு லீற்றர் பெட்ரோலை பெறுவதற்கு ஒரு லீற்றர் பெட்ரோலை செலவழிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஈ.பி.டி.பி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

எனவே கடந்த காலத்தில் கடற்தொழிலாளருக்காக அமைக்கப்பட்ட மண்ணெண்ணெய் நிரப்பு நிலையங்களில் கடற்தொழிலாளர்களுக்கு வழங்கிய முறையின் படி இலகுவாக பெட்ரோலை பெறுவதற்கு அரசாங்க அதிபர் மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் ஆவணை செய்ய வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

மத்திய கிழக்கில் தீவிரம் அடையும் போர்! இலங்கைக்கு கட்டார் வழங்கியுள்ள நற்செய்தி

மத்திய கிழக்கில் தீவிரம் அடையும் போர்! இலங்கைக்கு கட்டார் வழங்கியுள்ள நற்செய்தி

மட்டக்களப்பு - பாலமீன்மடு பிரதேசத்திலுள்ள அவரது காரியாலயத்தில் நேற்று முன் தினம் (17.03.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

கடற்தொழிலாளர்களின் பிரச்சினை

மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக கடற்தொழிலாளர்களுக்கான பெட்ரோல் இன்மை காரணமாக கடற்தொழிலாளர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இப்போது இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக QR திட்டம் வந்துள்ளது. இதன்காரணமாக மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடற்தொழிலாளர்களுக்கான மண்ணெண்ணெய் வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் பெட்ரோலை பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

ஒரு லீற்றர் பெட்ரோலை பெற ஒரு லீற்றர் பெட்ரோலை செலவழிக்க வேண்டியுள்ளதாக குற்றச்சாட்டு | Spend 1 Liter Of Petrol To Get 1 Liter Of Petrol

40 குதிரை வலு கொண்ட படகு இயந்திரம் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு 2 லீற்றர் பெட்ரோல் தேவைப்படுகிறது. இந்த படகு இயந்திரம் ஸ்ராட்டிங் செய்வது பெட்ரோலில். அதன் பின்னர் மண்ணெண்ணையில் இயங்குகின்றது. அதற்கான மண்ணெண்ணையை எங்களிடத்தில் இருந்து பெற்று வருகின்றனர்.

கடந்த காலத்தில் மண்ணெண்ணெய் நிரப்பு நிலையங்களில் 500 லீற்றர் பெட்ரோலை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து பெட்ரோலை பெற்று வழங்கி வந்தோம்.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நோக்கி படையெடுக்கும் வாகன உரிமையாளர்கள்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நோக்கி படையெடுக்கும் வாகன உரிமையாளர்கள்

எதிர்கொள்ளும் சிரமம்

தற்போது QR திட்டம் அறிமுகப்படுத்தியதையடுத்து பெட்ரோலை பெற்று கடற்தொழிலாளர்களுக்கு விநியோகம் செய்ய முடியாமல் இருக்கின்றது. கடற்தொழிலாளர்கள் ஒரு லீற்றர் பெட்ரோலை பெறுவதற்காக சுமார் 5 கிலோ மீற்றர் தூரம் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு ஒரு லீற்றர் பெட்ரோலை செலவழித்து மோட்டார் சைக்கிளில் சென்று பெற வேண்டியுள்ளது.

ஈரானிய க்ரூஸ் ஏவுகணைகள்..! திணறும் அமெரிக்காவின் கைகளில் ஆபத்தான 2270 KG குண்டுகள்

ஈரானிய க்ரூஸ் ஏவுகணைகள்..! திணறும் அமெரிக்காவின் கைகளில் ஆபத்தான 2270 KG குண்டுகள்

இதனால் கடற்தொழிலாளர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே கடந்த காலத்தில் கடற்தொழிலாளர்களுக்கு வழங்கிய முறையின்படி வழங்க அனைத்து விடயங்களையும் மேற்கொண்டு இலகுவாக கடற்தொழிலாளர்கள் பெட்ரோலை பெறுவதற்கு அனைத்து ஆவணங்களையும் செய்து தரும்படி கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள உதவி பணிப்பாளர், மட்டு மாவட்ட அரசாங்க அதிபரிடம் வினயமாக கேட்டுக் கொள்கின்றோம் என்றுள்ளார். 



8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US