திடீரென நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்: நெருக்கடியில் நோயாளிகள்
இரத்தினபுரி- கஹவத்த வைத்தியசாலையின் கண் வைத்தியர் திடீரென நாட்டை விட்டு வெளியேறியதால் நோயாளர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், சுகாதார அமைச்சின் அனுமதியுடன் குறித்த நிபுணர் மருத்துவப் பயிற்சிக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நோயாளிகளின் தேவைகள் பூர்த்தி
கஹவத்தை, கொடகவெல, ஓபநாயக்க, பெல்மடுல்ல, பலாங்கொடை மற்றும் வெலிகேபொல பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள சமூகங்களுக்கு கஹவத்த வைத்தியசாலை ஒரு முக்கிய சுகாதார வழங்குநராக இருந்து செயற்பட்டு வருகிறது.
அங்கு வாரத்தில் ஆறு நாட்களும் கண் சிகிச்சைகள் வழங்கப்படுவதால், கணிசமான நோயாளிகளின் தேவைகளை அந்த வைத்தியசாலை பூர்த்தி செய்து வருகிறது.
இந்த வைத்தியசாலையில் தினமும் சராசரியாக 150 முதல் 200 கண் அறுவை சிகிச்சைகள்
நடைபெற்று வந்தமையும் குறிப்பிடத்தக்கது.