மட்டக்களப்பில் இளைஞர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான விசேட உரையாடல்
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் தலைவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான குரலிலிருந்து கொள்கை நோக்கி உரையாடல் எனும் உயர்மட்டக் கலந்துரையாடல் நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வானது நேற்றைய தினம்(29.08.2026) மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
இளைஞர்களின் பங்கேற்பு
இந்த நிகழ்வில், இளைஞர்களின் பங்கேற்பை நாட்டின் அரசியல் மற்றும் தேசிய கொள்கை உருவாக்கச் செயற்பாடுகளில் வலுப்படுத்துவதை முதன்மை நோக்கமாக்கிக் கொண்டு கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகள், அவர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்கால தொலைநோக்குகள் தொடர்பான ஆலோசனைகள், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நேரடியாக முன்வைக்கப்பட்டு கொள்கை ரீதியிலான தீர்வுகளைப் பெறுவது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத் உட்பட நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வருகை தந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று, இளைஞர் தலைவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் நேரடியாக கேட்டறிந்துகொண்டுள்ளனர்.