கடும் வறட்சியால் திருகோணமலையின் தம்பலகாமம் பகுதி மக்கள் கடும் பாதிப்பு
திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் நிலவும் கடும் வரட்சி காரணமாக, கல்மெடியாவ பகுதியில் அமைந்துள்ள இரு குளங்கள் வறண்டு காணப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் எல் நினோ தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக பிரதேசத்தில் நீர்நிலைகள் படிப்படியாக வற்றிவரும் நிலையில், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
கடுமையான வறட்சி
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், குளங்களில் போதியளவு நீர் இல்லாததால் கால்நடைகளுக்கான குடிநீரைப் பெற்றுக்கொள்வதிலும், அவற்றை பராமரிப்பதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு தேவையான நீர் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் பற்றாக்குறையாகி வருவதால், கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வறட்சி நிலை தொடரும் பட்சத்தில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும்.
எங்களின் வாழ்வாதாரம் கால் நடை வளர்ப்பே காணப்படுகிறது. எனவே, பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு அவசரமாக குடிநீர் வசதி மற்றும் கால்நடைகளுக்கான நீர், உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



தமிழர் பகுதியில் தீச்சட்டி ஏந்தி போராட்டத்தில் குதித்த மக்கள் - அடையாளம் தெரியாத நபரால் ஏற்பட்ட குழப்பம்
வைத்திய நிபுணர்கள் கோரும் அனைத்து மருந்துகளையும் வழங்க முடியாது! சுகாதார அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு