தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மட்டக்களப்பு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடு
மட்டக்களப்பு - முனைத்தீவு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட பூசையின் போது சிறையிலுள்ள அரசியற்கைதிகளின் விரைவான விடுதலைக்காக பிரார்த்தனை செய்யப்பட்டுள்ளது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் மா.நடராசா, இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் அணி தலைவர் லோ.திபாகரன், போரதீவுபற்று பிரதேச சபை முனைத்தீவு வட்டார உறுப்பினர் கரன், மகளீர் அணி மட்டக்களப்பு உறுப்பினர் திருமதி.க.ரஞ்சினி மற்றும் வாலிபர் அணி உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு வழிபாடு செய்துள்ளனர்.



விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam