காலநிலை தொடர்பில் மீண்டும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எதிர்வரும் 29ம் திகதி நாட்டில் மீண்டும் கடுமையான மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக எசச்ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 29ஆம் திகதி முதல், செயல்பாட்டிலுள்ள கிழக்கு திசை காற்றழுத்த அலை (Active Easterly Wave) ஒன்று நாட்டை கடந்து செல்லவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடுத்த சில நாட்களில் தீவிரமான மழைக்கால நிலை காணப்படும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக, குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக, வளிமண்டலவியல் ஆய்வு திணைக்களம் வெளியிடும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகளை பொதுமக்கள் கவனமாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri