அரச நிறுவனங்களில் உருவாக்கப்படும் விசேட பிரிவு
சகல அரசு நிறுவனங்களிலும் ஒரு உள்ளக செயல்பாட்டு பிரிவை (Internal Operations Unit) அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலாளர், என்.எஸ். குமாரநாயக்க, இதற்கான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பிரிவு உருவாக்கத்தின் முதன்மை நோக்கங்கள்:
• அரசு நிறுவனங்களுக்குள் ஊழலை தடுப்பது
• ஒழுங்குமுறை பண்பாட்டை மேம்படுத்துதல்
• வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்தல்
• நெறிமுறையுடன் நிர்வாகத்தை மேம்படுத்துதல்
• இலஞ்ச ஊழல் ஆணையத்துடன் இணைந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த உதவுதல்
அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஒரு சிறப்பு பிரிவாக இந்த உள் செயல்பாட்டு பிரிவு அமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதான செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் தலைமையிலான அலுவலகங்களில் இந்த பிரிவு உருவாக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக, அமைச்சு செயலாளர்கள், மாகாண பிரதான செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி செயலாளர் எழுத்து மூலம் அறிவிப்பை வழங்கியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |