மன்னார் மாவட்டத்தில் விசேட சிகிச்சை நிலையம் தயார்
மன்னார் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் நூறு கோவிட் நோயாளர்களை அனுமதித்து சிகிச்சை வழங்க விசேட சிகிச்சை நிலையத்தை இராணுவத்தினர் தயார் செய்து வருகின்றனர்.
மன்னார் தாரபுரம் பகுதியில் அமைந்துள்ள துருக்கி சிட்டி பாடசாலையினை மாவட்ட அரசாங்க அதிபர் பொறுப்பேற்றுள்ள நிலையில், இராணுவத்தின் உதவியுடன் கோவிட் சிகிச்சை நிலையமாக மாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த சிகிச்சை நிலையத்தில் ஒரே நேரத்தில் நூறு கோவிட் தொற்று நோயாளர்களை அனுமதித்து சிகிச்சை வழங்கும் வகையில் தயார் செய்யப்பட்டு வருகின்றது.
குறித்த சிகிச்சை நிலையத்தில் மன்னார் சுகாதாரத் துறையினர் சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (7) மதியம் குறித்த சிகிச்சை நிலையத்தின் பணிகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.
மன்னார் மாவட்டத்தில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணம்
மற்றும் ஏனைய மாவட்டங்களில் உள்ள சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்பட்டு
வந்தமை குறிப்பிடத்தக்கது.









16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
