பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சோதனை நடவடிக்கை: வெளியான எச்சரிக்கை
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
அத்துடன், கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தொடர்பில் முறைபாடளிக்குமாறும் அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் மாத்திரம் 2,700 சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
அரிசி விற்பனை
அத்தோடு அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைக்கமைய சந்தையில் அரிசியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று (13) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுப்பாட்டு விலைக்கு அதிக விலையில் அரிசி விற்பனை செய்யப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)