நிதி அமைச்சராகவும் பதவியேற்றுள்ள பிரதமர் ரணிலின் விசேட உரை இன்று
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் பிற்பகல் விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்போது அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பான விடயங்களை பிரதமர் முன்வைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமராக பதவியேற்ற பின்னர் ரணில் விக்ரமசிங்க கடந்த 16ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருந்தார்.
பிரதமரான பின் நாட்டு மக்களுக்கு உரை
இதன்போது ”எதிர்வரும் சில மாதங்களுக்கு நீங்களும் நானும் வாழ்க்கையில் மோசமான காலகட்டத்தை கடக்க நேரிடும். அதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் முகம் கொடுக்க வேண்டும்.
நான் மக்களுக்கு விடயங்களை மறைத்து பொய் சொல்வதற்கு எந்தவகையிலும் விரும்பவில்லை. பயங்கரமாக இருந்தாலும் அசிங்கமாக இருந்தாலும் இதுதான் உண்மையான நிலைமை.
குறுகிய காலத்திற்கு நாம் கடந்த காலத்தைவிட மிகவும் கஸ்டமான காலத்திற்கு முகம் கொடுக்க போகின்றோம். இந்த நேரத்தில் நமக்கு கவலைப்பட மட்டுமே முடியும். ஆனால் இது குறுகிய காலத்திற்கு மட்டுமே.
எதிர்வரும் சில மாதங்களில் எமது நட்பு நாடுகளின் உதவிகள் மற்றும் ஒத்துழைப்பு எமக்கு கிடைக்கும். அவர்கள் எமக்கு உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர்“ என குறிப்பிட்டிருந்தார்.
எதிர்வரும் 7ஆம் திகதி ரணில் வழங்கப் போகும் அறிவிப்பு |
நிதியமைச்சராகவும் பதவியேற்பு
இந்த நிலையில் கடந்த 25ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே பிரதமரும், நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் உரையாற்றவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.