எதிர்வரும் 7ஆம் திகதி ரணில் வழங்கப் போகும் அறிவிப்பு
எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது அவர் இதனை குறிப்பிட்டார்.
இதேவேளை, பிரதமர் ரணில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் மாதப் நடுப்பகுதியில் நடைமுறையாகும் என எதிர்பார்க்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள நிலையில்தான் பிரதமர் பதவியை நான் ஏற்றேன். இயலுமானவரை செலவினத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு ரணிலிடம் உள்ள திட்டங்கள்
இந்த வருடத்துக்குள் 4 பில்லியன் அமெரிக்க டொலரை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற எதிர்ப்பார்க்கின்றோம். அதேநேரம், சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளினதும் உதவிகள் பெறப்படவுள்ளன.
கிடைக்கப்பெறும் உதவிகளில், அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

வெளியேறிய நடிகை, ஆனால் மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஸ்பெஷல் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
